×

அரும்பாக்கம் மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அண்ணாநகர்: அரும்பாக்கம் மார்க்கெட் பகுதியில் ஏராளமான ஜவுளிக்கடை, நகைக்கடை, வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள கடைகளின் உரிமையாளர்கள் சாலையை ஆக்கிரமித்து பொருட்கள், விளம்பர பலகைகளை வைத்தும், நடைபாதையில் தடுப்புகளை வைத்து ஆக்கிரமித்தும் இருந்தனர். மேலம், சிலர் நடைபாதையில் கடைகளை அமைத்து இருந்ததால் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்பட்டதுடன், தினமும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்தது. இந்நிலையில், மாநகராட்சி 8வது மண்டல உதவி பொறியாளர் பன்னீர்செல்வம் தலைமையில் ஊழியர்கள் நேற்று அரும்பாக்கம் மார்க்கெட் பகுதிக்கு சென்று, சாலை மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள், விளம்பர தட்டிகள், மரப்பெட்டிகள், தடுப்புகள் ஆகியவற்றை பொக்லைன் மூலம் அகற்றினர். மேலும் கடைகளுக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.

Tags : Removal ,Arumbakkam , Removal of occupations in Arumbakkam market
× RELATED முகவரி கேட்பதுபோல் நடித்து ஆட்டோவில்...