இந்து மதத்துக்கு மாறியவரை குடும்பத்துடன் எரிக்க முயற்சி

ரேபரேலி: உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலி, அதாபூர் ராடாசோவ் கிராமத்தை சேர்ந்தவர் முகமத் அன்வர். இவர், கடந்த ஆண்டு இந்துவாக மதம் மாறினார். பிறகு, தனது பெயரை தேவ் பிரகாஷ் படேல் என்றும் மாற்றிக் கொண்டார். தேவ் பிரகாஷின் இந்த நடவடிக்கைக்கு அந்த கிராமத்தை சேர்ந்த முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த ஞாயிறன்று தேவ் பிரகாஷ் வீட்டிற்கு சிலர் தீ வைத்து கொளுத்தினர். அதிர்ஷ்டவசமாக பின்பக்க வாசல் வழியாக தனது குழந்தைகள், குடும்பத்தினருடன் தேவ் தப்பி உயிர் பிழைத்தார். இது தொடர்பாக தேவ் பிரகாஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில், கிராம தலைவர்கள் 2 பேர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>