×

கொரோனாவை விட பல மடங்கு ஆபத்தானது ஆப்பிரிக்க காட்டில் பரவும் அதிபயங்கர ‘எக்ஸ் நோய்’: உலக நாடுகளுக்கு விஞ்ஞானி எச்சரிக்கை

பிரசெல்ஸ்: கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உலக நாடுகள் மீண்டு வரத் தொடங்கி இருக்கும் நிலையில், ‘எக்ஸ் நோய்’ என்ற அதிபயங்கரமான புதிய நோய் விரைவில் மனித குலத்தை தாக்கக் கூடும்,’ என மருத்துவ விஞ்ஞானி எச்சரித்துள்ளார். பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் மருத்துவ விஞ்ஞானி ஜீன் ஜாக்குவாஸ் டம்பாம். இவர், கடந்த 1976ம் ஆண்டு எபோலா வைரசை கண்டறிந்த விஞ்ஞானி பீட்டர் பயட்டுக்கு உதவியாக இருந்தவர். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘எக்ஸ் நோய்’ என்ற பயங்கரமான புதிய நோய் அச்சுறுத்தல் மனித குலத்திற்கு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறி இருப்பதாவது: கடந்த காலங்களில் மஞ்சள் காய்ச்சல், ரேபிஸ் மற்றும் லைம் நோய்  உள்ளிட்ட தொற்றுக்கள் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது. பின்னர் சிம்பன்சி எனப்படும் வாலில்லா ஆப்ரிக்க காட்டுக் குரங்கில் இருந்து எச்ஐவி உருவாகி, பின்னர் அது அபாயகரமான நோயாக மாறியது. தற்போது, ஆப்பிரிக்காவின் காடுகளில் இருந்து “எக்ஸ் நோய்” என்ற புதிய தொற்று பரவத் தொடங்கி உள்ளது. இந்த வைரஸ் விரைவில் உலக நாடுகளுக்கு பரவும் வாய்ப்புள்ளது. எனவே, இனிவரும் நாட்களில் பல வீரியம் மிகுந்த புதிய வைரஸ்கள் தோன்றக் கூடும். இவை மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். புதிய நோய் தொற்றுக்கள் வெளிவரக்கூடிய சூழலில் நாம் தற்போது இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

* ‘எக்ஸ் நோய்’ பெயர் ஏன்?
உலகளவில் இதுவரையில் புதிதாக கண்டுபிடிக்கப்படும் நோய், அது எந்த கிருமியால் பரவுகிறது? அதன் பாதிப்பும், மரண சதவீதமும் எப்படி இருக்கும் என்பது ஆரம்ப நிலையில் தெரியாமல் இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில், பெயர் தெரியாத அந்த நோய்க்கு ‘எக்ஸ் நோய்’ என பெயரிடப்படுவது வழக்கம். அது, எந்த கிருமியால் எப்படி பரவுகிறது என்பது உறுதியான பிறகு, அதற்கு புதிய பெயர் வைக்கப்படும்.

* சர்வதேச தொற்றாக மாறும்
‘எக்ஸ் நோய்’ பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுகையில், ‘எக்ஸ் நோய் ஒரு சர்வதேச தொற்று நோயாக மாறும் சாத்தியம் உள்ளது. முக்கியத்துவம் அளிக்கக் கூடிய நோய்களின் பட்டியலில் இந்த புதிய நோயும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது அவசியமாகும்,’ என எச்சரித்துள்ளது.

* காங்கோ பெண்ணுக்கு எக்ஸ் நோய் தொற்று
மருத்துவ விஞ்ஞானி ஜீன் ஜாக்குவாஸ் டம்பாம் மேலும் கூறுகையில், ‘‘காங்கோவை சேர்ந்த பெண் ஒருவருக்கு எபோலா நோய் தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அவர் கொரோனாவை விட வேகமாக பரவுகின்ற எபோலாவின் 50 முதல் 90 சதவீத இறப்பு விகிதத்தை கொண்ட, எக்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட துவங்கியுள்ளது. அவரிடம் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது,’’ என்றார்.

Tags : jungle ,nations ,African ,world ,Scientist , Extreme levels of ‘X disease’ spreading in the African jungle many times more dangerous than corona: Scientist warns nations
× RELATED திருமணிமாடக் கோயில் நாராயணன்