விவசாயிகளுக்காக காங்கிரஸ் கட்சியினர் சிறை செல்லவும் தயார்: காஞ்சி மேற்கு மாவட்ட புதிய தலைவர் உறுதி

காஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியில் புதிதாத மாநில, மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதன்படி காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட தலைவராக அளவூர் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சோனியா, ராகுல் காந்தி, கே.எஸ். அழகிரி ஆகியோரின் வழிகாட்டுதலில் காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக மாற்றுவேன். ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து புகையில்லா ஊராட்சியாக மாற்றி ராஜீவ் காந்தி விருது, தமிழக அரசின் விருது, பன்னாட்டு விருது என பல விருதுகளை வாங்கினேன். மத்திய பாஜ அரசு விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மக்கள் பிரச்னைகளுக்காகவும் காங்கிரஸ் கட்சியினர் சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம்.

காங்கிரஸ் கட்சியின் தியாகங்கள் செய்த தியாகிகள் நிறைந்த கட்சி. எனவே, இல்லங்கள் தோறும் கைச்சின்னம், கிராமங்கள்தோறும் காங்கிரஸ் கட்சி என்ற முழக்கத்துடன் அனைத்து தரப்பினரின் ஆதரவை பெறும் வகையில் கட்சி செயல்பாடு இருக்கும். மேலும் கட்சியில் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து, அனைவருக்கும் பிரதிநிதித்துவம் தரும் வகையில் செயல்பட்டு கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டுசெல்வேன் என்றார். அப்போது, கட்சி நிர்வாகிகள் அண்ணாதுரை, எஸ்.விஜயகுமார், நெடுஞ்செழியன், ஆர்.வி.குப்பன், பத்மநாபன், பரந்தூர் சங்கர், அருண், நாதன், சாதிக்பாஷா, குமார், அவளூர் சீனிவாசன், அன்பு உள்பட பலர் இருந்தனர்.

Related Stories:

>