×

144 தடை உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: பிரபலங்களை, அதிகாரத்தை பயன்படுத்தி கட்சியில் சேர நிர்பந்தம் கொடுப்பது, அரசியல் கட்சியை தொடங்க சொல்வது, இல்லை என்றால் அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பது என பாஜக செய்து வருகிறது. தமிழகத்திலும் இந்த முயற்சியை பாஜக ஒரு பிரபலத்தின் மூலம் கையாள முயற்சித்தது. ஆனால் அந்த பிரபலம் பாஜகவின் முகத்தில் கரியை பூசி விட்டு சென்றுவிட்டார்.

அனைத்து விஷயத்திலும் தளர்வை ஏற்படுத்தி விட்டு ஊரடங்கு உத்தரவை தொடர்வது எதிர்க்கட்சியினரை இயங்காமல் தடை செய்வதற்கும், ஆளுங்கட்சியினர் சுதந்திரமாக செயல்படுவதற்கும் தான். 144 தடை உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும். ரஜினி கட்சி தொடங்காத சூழ்நிலையில்  அவரிடம் யார் வேண்டுமானாலும் ஆதரவு கேட்கலாம். ஏன் திமுக கூட்டணிக்கு கூட ரஜினியின் ஆதரவு இருக்கலாம் என்றார்.

Tags : Mutharasan , 144, Prohibition, Mutharasan
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...