அறநிலையத்துறை கோயில்களில் பணியாற்றி வரும் 17 செயல் அலுவலர்கள் பணியிட மாற்றம்: கமிஷனர் உத்தரவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் பணியாற்றி வரும் 17 முதல்நிலை செயல் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூர் நவநீதகிருஷ்ணசாமி கோயில் செயல் அலுவலர் சங்கர் மேட்டுப்பாளையம் அனுமந்தராய சுவாமி கோயிலுக்கும், கிணத்துக்கடவு மாரியம்மன் விநாயகர் கோயில் அலுவலர் பாலசரவணக்குமார் வைகுண்டம் கள்ளபிரான் கோயிலுக்கும், காரைக்குடி கொப்புடைய நாயகி செயல் அலுவலர் பிரதீபா மதுரை கள்ளழகர் கோயிலுக்கும், கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோயில் அலுவலர் மாரிமுத்து மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கும், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அலுவலர் கலைவாணன் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கும், சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயில் அலுவலர் பாண்டியராஜூ கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயிலுக்கும், ஊட்டி மாரியம்மன் கோயில் அலுவலர் கொளஞ்சி சென்னை சென்னகேசவபெருமாள் கோயிலுக்கும், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரசுவாமி கோயில் அலுவலர் மாரியப்பன் தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும், திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோயில் அலுவலர் கோபி கொண்டத்து காளியம்மன் கோயில் அலுவலராக என மொத்தம்  17 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 4 பேர் மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றியதை கருத்தில் கொண்டும், 13 பேர் விருப்பம் மாறுதலின் பேரில் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர் என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories:

>