×

சென்னை, சேலம், மதுரை, நாமக்கல்லில் மக்கள் கிராமசபை கூட்டம்

சென்னை: சென்னை, சேலம், மதுரை, நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நடைபெறும் மக்கள் கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று பேசி வருகிறார். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் 7ம் தேதி(நாளை) காலை- தர்மபுரி மேற்கு மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியிலும், மாலையில் சேலம் மேற்கு மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியிலும், 8ம் தேதி(வெள்ளிக்கிழமை) குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியிலும், மாலையில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் நடைபெறும்”மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

9ம் தேதி காலையில் மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியிலும், மாலையில் தேனி வடக்கு மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதியிலும், 10ம் தேதி காலை சென்னை வடக்கு மாவட்டம் ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார். இத்தகவலை திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.

Tags : meeting ,Gram Sabha ,Chennai ,Salem ,Namakkal , DMK, people, village council meeting
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...