×

டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை

சென்னை: டாஸ்மாக் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: 15ம் தேதி - திருவள்ளுவர் தினம், 26ம் தேதி - குடியரசு தினம் மற்றும் 28ம் தேதி - வடலூர் ராமலிங்கர் நினைவு தினம் ஆகிய 3 நாட்கள் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும அதை ஒட்டிய டாஸ்மாக் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த மூன்று நாட்களும் கண்டிப்பாக கடைகள் மூடப்பட்டு மதுவிற்பனை செய்யப்படக்கூடாது. முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.


Tags : Tasmac ,stores , Tasmac Stores, Holidays
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...