×

சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கபட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்ட்ரல் - லக்னோ (06093, 06094) இடையே செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வாரம் இருமுறை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி வரும் 12, 16, 19, 23, 26 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்ட்ரலில் இருந்து  காலை 5.15 மணிக்கு புறப்படும்.

மறுமார்க்கமாக 14, 18, 21, 25, 28 மற்றும் பிப்ரவரி 1ம் தேதிகளில் வியாழன் மற்றும் திங்கள் கிழமைகளில் மாலை 4.20 மணிக்கு லக்னோவில் இருந்து புறப்படும். அதே போல் விசாகப்பட்டினம் - சென்ட்ரல் (02007, 02008) இடையேயான வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி வரும் 15ம் தேதி முதல் வெள்ளிகிழமைகளில்  மாலை 7.05 மணிக்கு விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு சென்ட்ரலுக்கு காலை 7.40 வந்து சேரும். மறுமார்க்கமாக சென்ட்ரலில் இருந்து வரும் 16ம் தேதி முதல் சனிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்படும். அதே போல் விசாகப்பட்டினம் - கொல்லம் (08567, 08568) இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Special trains, movement
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...