நாகர்கோவில் ரயில் நிலைய விரிவாக்கம்: பிளாட்பாரம் அமைக்க கம்பி கட்டும் பணி தீவிரம்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் வழிதடம் மிக முக்கியமானது ஆகும். இந்த வழி தடம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி நாகர்கோவில், திருநெல்வேலி, வாஞ்சிமணியாச்சி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூரை சென்றடைகிறது. இந்த வழி தடம் வழியாக தென் தமிழ்நாட்டிலிருந்து இயங்கும் அனைத்து ரயில்களும் இயங்குகின்றன. தற்போது சென்னை முதல் மதுரை வரை உள்ள 490 கி.மீ. பாதை இரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதையை இருவழிபாதையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரை உள்ள 85 கி.மீ. பாதையை இருவழிபாதையாக மாற்றமாற்றும் திட்டத்தை தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள கட்டுமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இருவழிபாதையாக்கும் பணி தற்போது வேகமாக நடந்து வருகிறது. இதுபோல் நாகர்கோவில் ஜங்சன் ரயில் நிலையம் விரிவாக்கப்பணி வேகமாக நடந்து வருகிறது. ரயில் நிலையத்தின் கிழக்கு பகுதியில் இரு தண்டவாளத்துடன் பிளாட்பாரங்கள் அமைக்கும் பணி நடந்தது வருகிறது.

இதுபோல் திருவனந்தபுரம் ரயில் நிற்கும் பகுதியிலும் புதிதாக தண்டவாளம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான மண்போட்டு விரிப்படுத்தும் பணி நடந்து வருகிறது. பிளாட் பாரத்திற்கு காங்கிரீட் அமைக்க ஆயத்தம் ஆகும் வகையில் கம்பிகள் கட்டப்பட்டு வருகிறது. காங்கிரீட் பணிகள் விரைவில் நடக்க இருப்பதாக கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தவிர ரயில் நிலையம் வரும் பயணிகள் பயன்படுத்தும் வகையில் திருவனந்தபுரம் ரயில்கள் நிற்கும் பகுதியில் நவீன கழிப்பறை கட்டுமான பணியும் நடந்து வருகிறது.

Related Stories:

>