முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதமா?: பிரதமர் மோடி தலைமையில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்.!!!

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 41 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். உருமாறிய கொரோனா வைரஸ் ஒரு பக்கம் பரவி வருகிறது. கொரோனா தடுப்பூசி வரும் 13-ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி தொடங்கவுள்ளது.

இந்நிலையில் நாளை (ஜனவரி 6-ம் தேதி) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி விநியோகம், விவசாயிகள் போராட்டம், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகியவற்றைக் குறித்து விவாதிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories:

>