×

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை!: மாலை 4 மணியுடன் முடிந்த 8 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிண்டியில் 15.5 செ.மீ. மழைப்பதிவு..!!

சென்னை: சென்னையில் கடந்த 8 மணி நேரத்தில் 15.5 செ.மீ. மழையானது பதிவாகியிருக்கிறது. நேற்று நள்ளிரவு முதலே தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் சாலைகள் ஸ்தம்பித்திருக்கின்றன. மழை பொழிவும் அதிகமாக இருக்கிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜனவரி மாதத்தில் இந்த மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. பிரதான சாலைகளில் அதிகளவு மழைநீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீரின் அளவு அதிகரித்திருக்கிறது. பொதுவாக ஜனவரி மாதத்தில் பெய்யும் மழையை காட்டிலும் தற்போது 4 நாட்களாக பெய்த மழையின் அளவு அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாலை 4 மணியுடன் முடிந்த 8 மணி நேரத்தில் சென்னை கிண்டியில் 15.5 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது. மாம்பலத்தில் 14.3 செ.மீ., அயனாவரத்தில் 12.5 செ.மீ. மழை பொழிந்து உள்ளது. பெரம்பலூரில் 11.6 , மயிலாப்பூரில் 11.5 செ.மீ., ஆலந்தூரில் 10.5 செ.மீ., தண்டையார்பேட்டையில் 10.4 செ.மீ. மழை பெய்துள்ளது. சோழிங்கநல்லூரில் 12 செ.மீ. மழை பொழிந்து உள்ளது. சென்னையில் சராசரியாக கடந்த 8 மணி நேரத்தில் 11.46 செ.மீ., மழை பதிவானதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து அம்பத்தூரில் 9.9 செ.மீ., எழும்பூரில் 7.7 செ.மீ.யும் மழை பெய்துள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Chennai ,Kindi , Heavy rain, 4 pm, 8 pm, Chennai Kindi, 15.5 cm. Rain
× RELATED சென்னை பெருங்குடியில் லாரி மோதி...