×

யார் வேண்டுமானாலும் ராஜினாமா செய்யலாம்: எதிர்மறையாக எடுக்க வேண்டாம்...ரத்தன் சுக்லா குறித்து மம்தா பானர்ஜி பேட்டி.!!!

கொல்கத்தா: லட்சுமி ரத்தன் சுக்லா ராஜினாமாவை எதிர்மறையாக எடுக்க வேண்டாம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரும், மேற்கு வங்கத்தின் ஹோவ்ரா மாவட்டத்தின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான லட்சுமி ரத்தன் சுக்லா தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

இந்த தகவலை பாரதிய ஜனதா கட்சியின் ஐடி துறை தலைவர் அமித் மால்வியா, சுக்லாவின் ராஜினாமா செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே போக்குவரத்து அமைச்சர் சுவேந்து அதிகாரி ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா செய்திருப்பது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, யார் வேண்டுமானாலும் ராஜினாமா செய்யலாம். அவர் (லக்ஷ்மி ரத்தன் சுக்லா) தனது ராஜினாமா கடிதத்தில் விளையாட்டுக்கு அதிக நேரம் கொடுக்க விரும்புவதாகவும், எம்.எல்.ஏ.வாக தொடருவதாகவும் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த ராஜினாமா விவகாரத்தை எதிர்மறையான வழியில் எடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.


Tags : Anyone ,interview ,Mamta Banerjee ,Ratan Shukla. , Anyone can resign: Don't take it negative ... Mamta Banerjee interview about Ratan Shukla !!!
× RELATED காவி மயமான தூர்தர்ஷன் லோகோ பாஜவின்...