×

இங்கிலாந்தில் மீண்டும் தேசிய ஊரடங்கு அமல்!: பிரிமீயர் லீக் உள்ளிட்ட கால்பந்தாட்டங்களுக்கு அனுமதி..!!

லண்டன்: இங்கிலாந்தில் மீண்டும் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கால்பந்தாட்டம் உள்ளிட்ட முக்கிய விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான விளையாட்டுகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. புதுவகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தையே அச்சமடைய செய்து வருகிறது. நேற்று மட்டும் 58,784 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அந்நாட்டில் மீண்டும் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கால்பந்தாட்டம் உள்ளிட்ட தொழிற்முறை விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிமீயர் லீக், லீக் கோப்பை அரையிறுதி போட்டிகள், எஃப்.ஏ. கோப்பை கால்பந்தாட்டம் ஆகியவற்றிற்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் வீரர்கள், அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவுட்டோர் ஜிம், டென்னிஸ், கோல்ஃப் ஆகிய விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கியமான பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் சம்பந்தப்பட்ட 18 பேருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதியானதால் ஒட்டுமொத்த விளையாட்டு அமைப்புகளும் அதிர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : England ,Premier League , England, National Curfew, Premier League, Football, Permission
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...