×

மேற்கு வங்கத்தில் பாஜக அசுர வேட்டை..சிதறுகிறது திரிணாமுல் காங்கிரஸ்: மீண்டும் ஒரு அமைச்சர் ராஜினாமாவால் மம்தா பானர்ஜி அதிர்ச்சி

கொல்கத்தா : திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேற்கு வங்க மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் லட்சுமி ரத்தன் சுக்லா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் அம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பாஜ.வின் அசுரத்தனமான அரசியல் வேட்டை ஆரம்பித்துள்ளது. மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு பாஜ தீவிரம் காட்டி வருகிறது. முதல் கட்டமாக, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரசை பலவீனப்படுத்தும்  முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் காரணமாக, பாஜக  விரித்த வலையில் சிக்கி, திரிணாமுல் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக விலக தொடங்கினர். சில வாரங்களுக்கு முன், மம்தாவின் அரசில் போக்குவரத்து அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி, பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், மேற்கு வங்க மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் லட்சுமி ரத்தன் சுக்லா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், லட்சுமி ரத்தன் சுக்லா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் இருப்பினும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதே சமயம், ஹவுரா மாவட்ட  செயலாளர் பதவியையும் லட்சுமி ரத்தன் சுக்லா ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரான லட்சுமி ரத்தன் சுக்லா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்எல்ஏவானார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Tags : Trinamool Congress ,resignation ,Mamata Banerjee ,minister , West Bengal, BJP, Trinamool Congress, Minister, resigns
× RELATED நெற்றி, மூக்கில் படுகாயம் மம்தாவை தள்ளிவிட்டது யார்?