இரவு நேரங்களில் ரயில்வே சுரங்கப்பாதையில் பாம்பு நடமாட்டம்-மின்விளக்கு அமைக்க கோரிக்கை

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் அருகே, ரயில்வே சுரங்கப்பாதையில் இரவு நேரங்களில் பாம்புகள் ஊர்ந்து செல்வதால், மின்விளக்குகள் அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் படிக்காசுவைத்தான்பட்டி கிராம ஊராட்சி உள்ளது. இதன் அருகே, லட்சுமியாபுரம்-காமராஜர் நகர் சாலையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது.

இதில், இரவு நேரங்களில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடன் செல்கின்றனர். சுரங்கப்பாதையின் அருகில் உள்ள புதர்களிலிருந்து கட்டுவிரியன், நல்லபாம்பு உள்ளிட்ட விஷஜந்துகள் அடிக்கடி சாலையை கடக்கின்றன. இரவு நேரங்களில் பாதசாரிகளும் சுரங்கப்பாதை வழியாக நடந்து செல்கின்றனர். எனவே, இந்த சுரங்கப்பாதையில் மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>