×

அடுத்த 6 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும்; வெள்ளக்காடாக மாறிய சென்னை புறநகர் சாலைகள்; வாகன ஓட்டிகள் அவதி

சென்னை: அடுத்த 6 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டையில் அடுத்த 6 மணி நேரத்திற்கு கனமழை கொட்டி தீர்க்கும் என கூறப்பட்டுள்ளது. சென்னையில் அனைத்து பகுதிகளிலும் அதிகாலை 4 மணி முதல் மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 3 முதல் 6 மணி நேரத்துக்கு 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறியுள்ளது.

சென்னை நகரில் இருள் கவிந்தது:

கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்து வருவதால் சென்னை மாநகர் முழுவதும் இருள் கவிந்து காணப்படுகிறது. நள்ளிரவில் லேசாக தொடங்கிய சாரல் காலையில் பலத்த மழையாக உருவெடுத்தது. இடை இடையே விட்டபோதிலும் தொடர்ந்து சென்னையில் பலத்த மழை கொட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு ஏற்பட்டது. மழை விடாமல் பெய்வதால் சென்னை ஆதம்பாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சைதாப்பேட்டை, பாரிமுனை, பழைய மாமல்லபுர சாலையின் தொடர்பு சாலைகளில் மழை நீர் தேங்கியது. சென்னை அண்ணா நகர், அம்பத்தூர், கொரட்டூர், வில்லிவாக்கம், முகப்பேறு, கோயம்பேட்டில் சாலைகளில் மழை நீர் தேங்கியது. இருள் கவிந்ததால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றனர்.

கடும் போக்குவரத்து நெரிசல்:

மழை காரணமாக சின்னமலை, ராஜ்பவன், சைதாப்பேட்டை, மத்திய கைலாஷ் உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அரைமணி நேரத்துக்கும் மேலாக ஒரே இடத்தில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  


Tags : roads ,Motorists ,Chennai ,floodplains , 6 p.m., heavy rain, floodplain, Chennai suburbs, roads
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...