×

ஒடிசாவில் 2 பாஜ நிர்வாகிகள் வெட்டிக் கொலை : மாநில சட்ட அமைச்சர் உட்பட 13 பேர் மீது கொலை வழக்கு

கட்டாக்: ஒடிசாவில் 2 பாஜ நிர்வாகிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாநில சட்ட அமைச்சர் உட்பட 13 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அமைச்சரை பதவியில் இருந்து நீக்க கோரிக்கை எழுந்துள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தின் சலேபூர் பகுதியை சேர்ந்த பாஜக தலைவர் குலமணி பரால் (75), மற்றும் அவரது நண்பரான பாஜக நிர்வாகி திபியசிங் பரல் (80) ஆகிேயார் கடந்த சில நாட்களுக்கு பைக்கில் தங்களது சொந்த கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த மர்ம நபர்கள் இருவரையும் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இச்சம்பவத்தில் ஆளும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சிக்கு தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது.
இந்நிலையில் கட்டாக் போலீசார் கொலையான இருவரின் சடலங்களை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த கொலை வழக்கில் ெதாடர்புடையதாக கூறி மாநில சட்ட அமைச்சர் பிரதாப் ஜீனா உட்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். சட்ட அமைச்சர் மற்றும் 12 பேர் மீது 302 (கொலை), 147 (கலகம்), 148 (கலகம், கொடிய ஆயுதத்தால் தாக்குதல்), 120- பி (கிரிமினல் சதி தண்டனை), 506 (கொலை மிரட்டல்), ஆயுத சட்டத்தின் 25 மற்றும் 27 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர் கோலக் மொஹாபத்ரா கூறுகையில், ‘இரட்டைக் கொலைகள், அண்டை மாநிலமான மேற்குவங்கத்தில் நடக்கும் ஆளும் திரிணாமுல் கட்சியினரால் நடத்தப்படும் கொலை சம்பவங்கள் போல் உள்ளது. மம்தாவுக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் அங்கு கொல்லப்படுகின்றனர். அதேபோல், ஒடிசாவில் உள்ள பிஜேடி தலைவர்களும் தங்களது அரசியல் போட்டியாளர்களை கொல்கின்றனர். கொலையான பாஜக தலைவர்கள், நிருதங்க கிராம பஞ்சாயத்தில் நடந்த ஊழல்கள் குறித்து பேசினர். அதனால், அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சட்ட அமைச்சர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்றார்.

Tags : executives ,BJP ,death ,Odisha ,state law minister , Odisha, BJP executives, Vettik murdered
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...