×

மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடுக்கு தடை கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடுக்கு தடை கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களைப் போன்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடஓதுக்கீடு கோரி கத்தோலிக்க கல்வி சங்கம் வழக்கு தொடர்ந்தது. கலந்தாய்வு நடக்கும் நிலையில் மாணவர்கள் நலன் கருதி இடைக்கால உத்தரவு மூலம் இடையூறு ஏற்படுத்த முடியாது என உயர்நீதிமன்றம் கூறியது. தனியார் பள்ளி மாணவர்கள், தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்க வழக்கு 3 வாரத்துக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு திட்டவட்டமாக கூறியுள்ளது.

7.5% உள்ஒதுக்கீடுக்கு இடைக்கால தடையில்லை மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எனவே தமிழக அரசு கொண்டு வந்துள்ள 7.5% உள்ஒதுக்கீட்டு சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என கடந்த மாதம் 16-ம் தேதி நிதிபதிகள் தெரிவித்தனர். அரசுப் பள்ளிகளின் தரம் குறைவாக இருப்பதால் தான் மாணவர்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறியிருந்தது.


Tags : Chennai High Court , In the medical course, the 7.5% quota, intermediate, is not fertile
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...