சென்னையில் வெவ்வேறு இடங்களில் நடந்த வாகன விபத்துகளில் சிக்கிய 3 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் வெவ்வேறு இடங்களில் நடந்த வாகன விபத்துகளில் சிக்கிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். தாம்பரம் புறவழிசலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற விக்னேஷ் (23) நிலைத்தடுமாறி விழுந்து உயிரிழந்தார். மீஞ்சூர்- வண்டலூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து ராஜேஷ்(34) என்பவர் உயிரிழந்துள்ளார். மதுரவாயல் புறவழிசலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆவடி ராணுவத் தளவாட ஆலையைச் சேர்ந்த ராஜி தவறி விழுந்து உயிரிழந்தார். சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் அடைமழை பெய்து வருவதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>