அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை மாற்றக்கோரி ட்ரம்ப் பேசும் ஆடியோ!: ஜோ பிடன், பராக் ஒபாமா கண்டனம்..!!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜார்ஜியா மாகாணத்தின் முடிவுகளில் மாற்றம் செய்யக்கோரி அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் புதிய அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், பராக் ஒபாமா உள்ளிட்ட பலர் டிரம்ப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த நவம்பர் 3ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், வெற்றிபெற்றார். வரும் 20ம் தேதி ஜோ பைடன் புதிய அதிபராக பதவியேற்கவுள்ள நிலையில், அதிபர் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறார். தேர்தல் முடிவுகளை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனிடையே ஜார்ஜியா மாகாணத்தில் ஜோ பைடனை விட 1 வாக்கு அதிகம் பெற்றதாக அறிவிக்கக்கோரி தேர்தல் அதிகாரியிடம் டிரம்ப் பேசும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அதிபர் பணியை செய்வதற்க்கு பதிலாக புகார் செய்வதற்கே அதிக நேரம் செலவழித்த டிரம்ப், இன்னும் எதிர்காக அந்த பதவியில் நீடிக்க விரும்புகிறார் என தெரியவில்லை என புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க ஜனநாயகத்தின் அடிப்படைக்கே மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப்பின் பெயரை குறிப்பிடாமல் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா டிவிட் செய்துள்ளார்.

டிரம்ப் பேசிய ஆடியோ:

அந்த ஆடியோவில், ரஃபென்ஸ்பெர்கரிடம் ஜார்ஜியா மாகாணத்தில் பதிவான வாக்குகளில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சுமத்திய ட்ரம்ப், பைடன் தரப்பு என்ன முறைகேடு செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், தேர்தல் அதிகாரி என்ற முறையில் நீங்கள் அதைப் புகாரளிக்கவில்லை. இதுவே ஒரு கிரிமினல் குற்றம். சட்டப்படி முறைகேடுகளை நீங்கள் அனுமதிக்க முடியாது. இது உங்களுக்கும், உங்களின் வழக்கறிஞருக்கும் ஒரு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். தேர்தல் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். எனக்கு கூடுதலாக 11,780 வாக்குகள் தேவைப்படுகிறது. எனவே, தேர்தல் முடிவை மாற்ற தேவையான வாக்குகளை கண்டுபிடியுங்கள் என மிரட்டும் தொனியில் பேசுவதாக அமைந்துள்ளது.

Related Stories:

>