×

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகினார் கே.எல் ராகுல்: பிசிசிஐ தகவல்

சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து கே.எல் ராகுல் விலகினார். இந்திய அணி பயிற்சி மேற்கொண்ட போது கே.எல் ராகுலின் இடது கை மணிக்கட்டில் காயம் காரணமாக விலகினார். கே.எல் ராகுல் காயம் சரியாக 3 வாரங்கள் ஆகும் என்றும் அவர் இந்திய திரும்ப உள்ளதாகவும் பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. அவரது காயத்தின் தன்மை மற்றும் அதனை சரியாய் செய்ய பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அவர் செல்ல உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே இன்னும் இரண்டு போட்டிகளே உள்ள நிலையில் கே.எல்.ராகுல் தொடரில் இருந்து விலகியுள்ளார். உமேஷ் யாதவ், ஷமி ஆகியோர் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் ஜனவரி 7- ஆம் தேதி நடைபெறவுள்ளது.


Tags : KL Rahul ,BCCI , Australian, Test, injured, withdrawn, KL Rahul
× RELATED டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி