அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 % ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

சென்னை: 7.5 சதவித உள் இட ஒதுக்கீடு வழங்கி கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட புதிய வழக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவித உள் இடஒதுக்கீடு வழங்கி அரசு சட்டம் கொண்டு வந்தது. இதன் முலம் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் 405 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

இந்நிலையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழக்கும் சட்டத்தை எதிர்த்து ஏற்கனவே வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில், ஷிவானி உள்ளிட்ட சில மாணவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழக அரசின் இந்த சட்ட அரசியலமைப்புக்கும், அடிப்படை உரிமைக்கும் எதிரானது. எனவே இதனை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பான அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை  நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசின் இந்த உத்தரவு என்பது ஒருதலைபட்சமான நடவடிக்கை மற்றும் சட்டத்திற்கு எதிராக உள்ளதாகவும் இது அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது என தெரிவித்தார். தமிழக அட்வகேட் ஜெனரல், இதே கோரிக்கையுடன் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் இந்த வழக்குகள் நாளை விசாரணைக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீட்டு வழங்கிய உத்தரவிற்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் நாளை (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்த நீதிபதிகள் விசாரணை தள்ளிவைத்தனர்.

Related Stories:

>