×

மறைந்த முதல்வர் ஜெயலலிதா செலுத்தவேண்டிய வரி விவரங்களை தாக்கல் செய்யக்கோரி தீபக் வழக்கு

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் வீட்டை அவரது நினைவில்லமாக மாற்ற கடந்த 2017ம் ஆண்டு அரசு முடிவெடுத்தது. இதற்கு அவரது அண்ணன் வாரிசுகளான தீபாவும் தீபக்கும் ஆட்சேபனை தெரிவித்து, தங்களை அவரது வாரிசுகள் என வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த, உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவின் 188 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையை தீபா, தீபக் ஆகியோர் தரப்புக்கு வழங்கியதோடு, அவர்களை முதல்நிலை சட்டபூர்வ வாரிசுதாரர்கள் என அறிவித்தது. இந்த நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு உள்ள வருமான வரி பாக்கி, சொத்து வரி பாக்கி உள்ளிட்டவை தொடர்பான அனைத்து விவரங்களையும் தங்கள் தரப்புக்கு வழங்க கோரி தீபக் தரப்பில் ஐகோர்ட்டில் மனு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நேற்று நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதர்சனம், கடந்தாண்டு ஜூலை மாதமே இதே கோரிக்கையுடன் வருமான வரித்துறையிடம் மனு அளித்ததாகவும் அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தெரிவித்தார். வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீனிவாஸ், வருமான வரி, சொத்து வரி போன்ற விவரங்கள் வேண்டுமானால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை அணுக வேண்டுமே தவிர, எல்லா விவரங்களையும் எங்களுக்கு கொடுங்கள் என கூறி வழக்கு தொடர முடியாது என தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் வருமான வரித் துறை உள்ளிட்ட அனைவரையும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, குறைந்தபட்சம் மனுதாரர் யாரை அணுகவேண்டும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags : Deepak ,Jayalalithaa , Deepak's case seeks filing of tax details to be paid by the late Chief Minister Jayalalithaa
× RELATED நடப்பாண்டு வெயில் அதிகமாக இருக்கும்...