×

சுடுகாட்டில் 24 பேர் பலி விவகாரம்: நகராட்சி அதிகாரிகள் 3 பேர் அதிரடி கைது: சடலங்களுடன் நடுரோட்டில் உறவினர்கள் மறியல்

காஜியாபாத்: காஜியாபாத் மாவட்டம் முரத்நகர் சுடுகாட்டு கட்டிடம் இடிந்து 24 பேர் இறந்தது தொடர்பாக, மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். காஜியாபாத் மாவட்டம் முரத்நகர் அடுத்த உக்லர்ஷி கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவரின் சடலத்தை தகனம் செய்ய அங்குள்ள சுடுகாட்டில் இறுதிச் சடங்கு நடந்த போது, அதில் உறவினர்கள், கிராமத்தினர் என 100க்கும் அதிகமான ஆட்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கூடியிருந்த கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்ததில் இடிபாடுகளில் சிக்கி 24 பேர் பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த நிலையில் 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாவுக்கு சென்று பலரும் பலியானது குறித்து கடும் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலையும் பிரதமர் நரேந்திர மோடி, காஜியாபாத் எம்.பி, எம்எல்ஏ ஆகியோர் தெரிவித்தனர். துரதிர்ஷ்ட சம்பவம் எனக் குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்த உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார்.

மேலும் கட்டிடம் இடிந்தது குறித்து விரிவான விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்கவும் மாவட்ட கலெக்டர் அஜய் சங்கர் பாண்டேவுக்கு அறிவுறுத்தி இருந்தார். இதனிடையே சொற்பமான இழப்பீடு வழங்கிய அரசை கண்டித்தும், ₹20 லட்சம் இழப்பீடு கோரியும், விபத்தில் இறந்த 2 பேர் சடலங்களை முரத்நகர் காவல் நிலையம் அருகே டெல்லி  மீரட் நெடுஞ்சாலை குறுக்கே நேற்று காலை கிடத்தி, இறந்தவர்களின் உறவினர்களுடன் ஏராளமான கிராமத்தினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பலியானவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் எனவும் கும்பல் வலியுறுத்தியதால் அங்கு பரபரப்பு தொடங்கியது. நேரம் ஆக ஆக, டெல்லிக்கும், மீரட்டுக்கும் பயணம் மேற்கொண்ட ஏராளமான பயணிகளும், அவர்களது வாகனங்களும் முடக்கப்பட்டன. அதையடுத்து முரத்நகர் பகுதியின் டெல்லி  மீரட் நெடுஞ்சாலையில் பதற்றம் தொற்றியது.

சாலை மறியலை கைவிடக் கோரிய ஊரகப் பிரிவு காவல்துறை எஸ்.பி இரஜ் ராஜா, கட்டிடம் இடிந்த விவகாரம் குறித்து துறை ரீதியிலான விசாரணை நடத்தும் நோக்கத்தில், முரத்நகர் நகராட்சி செயல் அதிகாரி நிஹரிகா சிங், இளநிலை இன்ஜினியர் சந்திர பால், சூப்பர்வைசர் ஆஷிஷ் ஆகியோரை கைது செய்து உள்ளதாக மக்களிடம் தெரிவித்தார். அது மட்டுமன்றி, தலைமறைவாகி உள்ள  இடிந்த கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததார அஜய் தியாகியை கைது செய்ய குழுக்களாக பிரித்து போலீஸ் படை பல திசைகளுக்கும் அனுப்பி வைத்து உள்ளதையும் அவர் எடுத்துரைத்தார். சாலை மறியல் நடைபெற்ற இடத்திற்கு கலெக்டர் பாண்டே, எஸ்பி கலாநிதி நைதானி ஆகியோர் விரைந்து வந்து, கோரிக்கைகள் குறித்து அரசு கவனத்திற்கு உடனே கோண்டு செல்லப்படும் என உறுதியளித்து, காலை வேளை போக்குவரத்து பாதிப்பால் பலரும் அவதிப்படுவதால், சாலை மறியலிலில் ஈடுபட்ட அனைவரையும் அமைதியாக கலைந்து செல்லும்படி கோரினர். அதிகாரிகள் வருகைக்குப் பின்னர் சாலையின் ஒரு பகுதி வழியே வாகனங்கள் செல்ல போராட்டம் நடத்தியவர்கள் அனுமதித்தனர்.



Tags : Relatives ,Municipal ,road ,Nadu , 24 killed in blast case: 3 municipal officials arrested in action: Relatives stir up bodies in Nadu road
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ