ஐ.டி நிறுவனம் மற்றும் பட்டதாரி இளைஞர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

பெங்களூரு:  பெங்களூருவில் உள்ள சில ஐ.டி நிறுவனத்தில் காலை, மதியம் உணவு மற்றும் டீ வழங்குவதாக பெண் ஒருவர் குத்தகைக்கு எடுத்து, பணம் வாங்கிவிட்டு, முறையாக உணவு வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து ஐ.டி நிறுவன ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, நிர்வாக அதிகாரிகள் அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் அந்த பெண் அம்ருதஹள்ளியை சேர்ந்த நந்தினி. லாக்டவுன் நேரத்தில் சில ஐ.டி நிறுவனங்களில் காலை, மதிய உணவும், மாலையில் டீ வழங்குவதாக கூறி பல லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.

ஆனால் கூறியபடி உணவு சப்ளை செய்யவில்லை. மேலும் இதேபோன்று ஐ.டி நிறுவனத்திற்கு உணவு, டீ சப்ளை செய்ய ஆட்கள் தேவை என்று கூறி, இளைஞர்கள் சிலரை வரவழைத்து, அவர்களிடம் தலா ரூ.1.50 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு, வேலை வழங்காமல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக இளைஞர்கள் சிலரும், நந்தினி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் தனிப்படை அமைத்து நந்தினியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அவரை கைது செய்தனர். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த அம்ருதஹள்ளி போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories:

>