சங்கராந்தி பண்டிகைக்கு முன் பூமி பூஜை பைராபுரா-தாசரஹள்ளி ஏரிக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம் : எம்எல்ஏ சி.டி.ரவி தகவல்

சிக்கமகளூரு: பைராபுராவிலிருந்து தாசரஹள்ளி ஏரிக்கு தண்ணீர் நிரப்புவதற்காக 28 கோடி செலவில் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு வரும் சங்கராந்திக்கு முன் பூமி பூஜை நடத்தப்படும் என்று பாஜ தேசிய பொது செயலாளர் சி.டி. ரவி தெரிவித்தார்.  சிக்கமகளுரு கிராம பஞ்சாயத்து தேர்தல் வெற்றி குறித்து பாஜ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சிக்கமகளூருவில் இருக்கும் தன் வீட்டில் ஆலோசனை நடத்திய அமைச்சரும், பாஜ தேசிய தலைவருமான சி.டி.ரவி செய்தியாளர்களிடம் கூறுகையில்,தொகுதி வளர்ச்சிக்கு எந்த கட்சி பாகுபாடும் இல்லாமல் பணியாற்றி வருகிறேன். அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

தொகுதியில் ஏற்படும் குடிநீர் பிரச்னையை தீர்க்கவும், விவசாயிகளின் நலனுக்காகவும் பைராபுராவிலிருந்து மாதரசனகரே வழியாக தாசரஹள்ளி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல 28 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான குத்தகை விடும் பணிகள் தொடங்கப்பட்டு வரும் ஜன.14ம் தேதியான சங்கராந்திக்கு முன் இதற்காக பூமி பூஜை நடத்தப்படும். இந்த பணிகள் தொடங்கப்பட்டு 15 மாதங்களுக்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு ஏரிக்கு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை பெற்றுக்கொள்ள முடியும்’’ என்றார்.  அமைச்சர் சி.டி.ரவி முன்னிலையில்  மஜத கட்சியை சேர்ந்த பலர் பாஜவில் இணைந்தனர்.

Related Stories:

>