காங்கிரஸ் கட்சியில் சித்தராமையாவுக்கும் சிவகுமாருக்கும் போட்டி: அமைச்சர் தகவல்

பெங்களூரு: காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, கட்சி மாநில தலைவர் டி.கே.சிவகுமார் இடையே போட்டியுள்ளது என்று மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ்பொம்மை தெரிவித்தார். ஹாவேரியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் பசவராஜ்பொம்மை பேசியதாவது, காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, கட்சி மாநில தலைவர் டி.கே.சிவகுமார் இடையே போட்டியுள்ளது. அவர்கள் இடையே நடைபெறும் போட்டியில் காங்கிரஸ் இன்று பழுதடைந்த பஸ் போல் ஆகியுள்ளது.  காங்கிரஸ்-பா.ஜ. இடையே போட்டி கிடையாது. காங்கிரஸ் கட்சிக்குள்ளே போட்டியுள்ளது. எனக்கு உள்துறை அமைச்சர் என்ற ஆணவம் கிடையாது. தொகுதிக்கு வெளியே தான் நான் அமைச்சர்.

தொகுதிக்கு வந்த பின் பசவராஜ் மட்டுமே. கிராம பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ. ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாத எதிர்க்கட்சியினர் தவறான கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். கிராம பஞ்சாயத்து தேர்தல் போல் தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் கட்சி ஆதரவு வேட்பாளர்கள் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது’’ என்றார்.

Related Stories:

>