வீடு புகுந்து வீடியோ தாய், மகளுக்கு தொல்லை 3 வாலிபர்கள் கைது

புதுடெல்லி: வடமேற்கு டெல்லி வசீர்பூர் பகுதியின் ஜேஜே காலனியில் 35 வயது பெண், மற்றும் 18 வயதில் மற்றொரு இளம் பெண்ணிடம் 2 வாலிபர்கள் அத்துமீறியும், பாலியல் தொல்லை கொடுத்தும் துன்புறுத்தும் ஆபாச வீடியோ ஞாயிறன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த விஷயத்தை போலீஸ் கவனத்திற்கு சமூக ஆர்வலர்கள் உடனே கொண்டு சென்றனர். வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், ஜேஜே காலனி மக்களிடம் விசாரணை, பஸ் மற்றும் மெட்ரோ நிலையங்களில் விசாரணை என அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அதில் சோனு(22), அமித்(24) மற்றும் ரித்திக்(18) எனும் 3 பேர் போலீசிடம் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், 35 வயது பெண்ணும், 18 வயது பெண்ணும் தாய், மகள் என்றும் அவர்களது குடிசையில் வைத்து 29ம் தேதி இரவு அத்துமீறியதையும் சோனுவும், அமித்தும் ஒப்புக் கொண்டனர். மேலும் அத்துமீறலை வீடியோ படம் பிடித்ததாக ரித்துவையும் காட்டிக் கொடுத்தனர்.

Related Stories:

>