×

கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம் 200 பேரிடம் 2.1 கோடி மோசடி செய்த தந்தை, மகன் கைது: பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

புதுடெல்லி:உத்தரபிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த புவனேஷ் குப்தா(59) மற்றும் அவரது மகன் விவேக்(34) ஆகியோர் கடந்த 30 ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வருகின்றனர். இவர்கள் டெல்லி உத்தம்நகரில் நகை கடை ஒன்றை நடத்தி வந்தததோடு, பல்வேறு முதலீட்டு திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்தனர். மதலீட்டு திட்டங்களில் சேர மக்களை ஈர்ப்பதற்காக அதிர்ஷ்ட குலுக்கல் நடத்தி டிவி, பிரிட்ஜ் போன்றவற்றையுயம் வழங்கி வந்துள்ளனர்.
குறிப்பாக, மோகினி எண்டர்பிரைசஸ் என்கிற பெயரில்  இவர்கள் நடத்திய முதலீட்டு திட்டங்களில் முதலீட்டார் ஒருவர் மாதம் 3,000 செலுத்த வேண்டும். இரண்டாவது திட்டத்தில் முதலீட்டாளர் மாத மாதம் 75,000 பணத்தை தொடர்ந்து 20 மாதங்களுக்கு கட்ட வேண்டும். இறுதிமாதம்வரை குலுக்கலில் பரிசு கிடைக்காதவர்களுக்கு நகைகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு லக்கி டிரா ூலம் கார், பிரிட்ஜ் மற்றும் வாசிங்மெசின் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

இதுபான்று கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை சுமார் 18 குலுக்கல் நடத்தி பரிசுகளை வழங்கினர். அதோடு, தந்தை, மகன் இருவரும் அதே பகுதியில் நகை நகை கடை நடத்தி வந்ததால் நம்பிக்கையின்  பேரில் பலர் முதலிட்டு திட்டங்களில் தங்களது பணத்தை முதலீடு செய்தனர். இந்நிலையில், திடீரென நகை கடையை மூடிவிட்டு முதலீட்டாளர்களிடம் வசூலித்த சுமார் 2.1 கோடியை சுருட்டிக்கொண்டு குடும்பத்துடன் தலைமறைவாகினர். முதலீட்டாளர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தந்தை, மகன் இருவரையும் டெல்லி பொருளாதாரக் குற்றப்பிரிவுப் போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர்.


Tags : Economic Crimes Division Police Action , Father, son arrested for swindling Rs 2.1 crore from 200 through attractive schemes: Economic Crimes Division police action
× RELATED தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில்...