×

சேரன்மகாதேவியில் பி.எச்.பாண்டியன் சிலையை முதல்வர் எடப்பாடி திறந்தார்

நெல்லை: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி கோவிந்தப்பேரியில் பி.எச்.பாண்டியன் சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவர் பி.எச்.பாண்டியன் மணிமண்டபம் மற்றும் திருஉருவ சிலை திறப்புவிழா நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி கோவிந்தபேரியில் நேற்று நடந்தது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி. தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன் வரவேற்றார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பி.எச்.பாண்டியன் மணிமண்டபத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து பி.எச்.பாண்டியன் திருவுருவ சிலையை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், இருந்தாலும், மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வார்த்தைகளுக்கு பொருத்தமானவர் பி.எச்.பாண்டியன் ஆவார். கோவிந்தப்பேரியில் தொடங்கி கோட்டை வரை ேகாலோச்சிய பெருமை அவருக்கு உண்டு. எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது அவரோடு இணைந்து பணியாற்றியதோடு, 4 முறை எம்எல்ஏ, 1985ல் சபாநாயகர் பதவியை அலங்கரித்த பெருமை அவருக்கு உண்டு.

தேர்தல் ஆணையர் சேஷனுக்கு இணையாக பிஎச் பாண்டியன் சபாநாயகர் பதவிக்கு பேரும், புகழும் ஈட்டித் தந்தார். அவர் சபாநாயகராக ஆன பின்புதான் சட்டமன்றத்திற்கு வானளாவிய அதிகாரம் உண்டு என்பதை அனைவரும் அறிந்து கொள்ள முடிந்தது. இவ்வாறு அவர் பேசினார்.


Tags : Edappadi ,BH Pandian , Cheranmakhadevi, P.H. Pandian statue, Chief Edappadi, unveiled
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்