துணிக்கடை, அரிசி குடோனில் தீ

சென்னை: சென்னை சவுராஷ்டிரா நகரில் ராக்கி (30) என்பவர் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை 4 மணிக்கு இந்த கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் எழும்பூர், நுங்கம்பாக்கம் பகுதிகளில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதுகுறித்து சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தீவிபத்தில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து கட்டிட உரிமையாளரை விசாரிக்க வேண்டும் எனவும் ராக்கி போலீசில் புகார் அளித்துள்ளார். துணிக்கடை நடத்தும் ராக்கி, பெண் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாசர்பாடி பொன்னப்பா தெருவை சேர்ந்த அருணாசலம் (40), நெற்குன்றம் பெருமாள் கோயில் தெருவில் அரிசி குடோன் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இந்த குடோனில் தீவிபத்து ஏற்பட்டு, உள்ளே இருந்த அரிசி மூட்டைகள் கொழுந்துவிட்டு எரிந்தன. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்ேபரில், கோயம்பேடு மற்றும் மதுரவாயல் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Related Stories:

>