×

விக்கிலீக்ஸ் தலைவர் அசாஞ்சேவை நாடு கடத்த இங்கி. மறுப்பு

லண்டன்: விக்கி லீக்ஸ் என்ற செய்தி நிறுவனத்தின் தலைவர் ஜூலின் அசாஞ்சே அமெரிக்க அரசு உட்பட பல்வேறு நாடுகளின் ரகசியங்களை அம்பலப்படுத்தியவர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் மீது அமெரிக்கா 18 வழக்குகளை பதிவு செய்துள்ளது. லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் 2012ம் ஆண்டு அசாஞ்சே தஞ்சமடைந்தார். 7 ஆண்டுகள் அவர் அங்கு தங்கியிருந்த நிலையில் அவருக்கு அளித்து வந்த பாதுகாப்பை கடந்த 2019ம் ஆண்டு ஈக்வடார் திரும்ப பெற்றது.

இதனையடுத்து லண்டன் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அசாஞ்சேவை தங்களிடம் ஒப்படைக்க அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. ஆனால் அமெரிக்காவிடம் தன்னை ஒப்படைக்க கூடாது என்று அசாஞ்சே லண்டனில் உள்ள ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி வனேசா பிராய்ட்சர், அசாஞ்சே அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டால் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே அவரை நாடு கடத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டார்.

Tags : Assange ,WikiLeaks ,Denial , WikiLeaks leader, Assange, denied
× RELATED அமெரிக்காவுக்கு அசாஞ்சேவை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை முடிவு