×

பாக்.கை கழற்றி விட்ட அமெரிக்கா

வாஷிங்டன்: சுமார் 30 நாடுகள் ஒன்றிணைந்து நேட்டோ  எனப்படும் வட அட்லாண்டிய ஒப்பந்த அமைப்பை ராணுவ செயல்பாடுகளுக்காக  உருவாக்கியுள்ளன. இந்த கூட்டமைப்பில் இல்லாத சில நாடுகளுடனும் ராணுவ  நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. இந்த நேட்டோ அல்லாத நட்பு  நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இருந்து வருகிறது.

இதன்மூலம் பல பில்லியன் டாலர்களையும் அமெரிக்காவிடமிருந்து பெற்று பயனடைந்து வருகிறது.  இந்நிலையில், ஹக்கானி உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு தருவதால் நேட்டோ அல்லாத நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கி அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


Tags : United States ,Pakistan , Pakistan, USA
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்