தனியார் விடுதியில் திருட்டு; 2 பேர் கைது

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள தனியார் விடுதியில் வசிப்பவர் ராமச்சந்திரன் (56). கடந்த 1ம் தேதி காலை ராமச்சந்திரன், தங்கிய அறையில் இருந்த டிவி திருடு போனது. புகாரினப்டி கண்ணகிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதையொட்டி, நேற்று முன்தினம் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி சுற்றி திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (27) சர்க்கரை (எ) வினுசக்கரவர்த்தி (27) என தெரிந்தது. மேலும் விசாரணையில், தனியார் விடுதியில் இருந்து 3 செல்போன்களையும், ராமச்சந்திரன் அறையில் டிவியை திருடியதை ஒப்பு கொண்டனர். இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>