×

கோவிஷீல்டு தடுப்பூசி விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி: பிரதமர் மோடி முதலில் போட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்

கொரோனா தடுப்பூசியை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 3-ம் கட்ட பரிசோதனையை முடியாத போது அவசரம் காட்டுவது ஏன் என நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். உலக நாடுகளை கலங்கடித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் - அஸ்ட்ராஜெனெகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு முதலில் ஒப்புதல் தந்த நிலையில் மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது. கோவிஷீல்டு என்ற இந்த தடுப்பூசியை புனே நகரில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தயாரிக்க உரிமம் பெற்றுள்ளது.

ஹைதராபாத் நகரில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கும் மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இரு தடுப்பூசிகளுமே 110% பாதுகாப்பானவை என மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உறுதி அளித்துள்ள நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை வரவேற்றுள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்த தடுப்பூசி மத்திய அரசுக்கு 250 ரூபாய்க்கும் பொது வழியில் 1000 ரூபாய்க்கும் விற்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையின் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் மத்திய அரசு அவசரம் காட்டுவது ஏன் என மருத்துவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தடுப்பூசி விவகாரத்திலும் மத்திய அரசு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஆதரகவாகவே செயல்படுவதாக குற்றம் சாட்டினார். இந்த விஷயத்தில் மத்திய அரசு அவசரம் காட்ட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இதனிடையே கோவிஷீல்டு தடுப்பூசிக்கே முன்னுரிமை வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி மாற்று மருந்தாகவே பயன்படுத்தப்படும் என அந்த அமைச்சகம் கூறியுள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் ஆகியோர் அவர்கள் நாட்டு மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த்த கொரோனா தடுப்பூசியை முதல் முதலாக போட்டுக்கொண்டது போல பிரதமர் மோடியும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.


Tags : Congress ,Modi , Federal approval for sale of Govshield vaccine: Congress insists Prime Minister Modi should put it first
× RELATED மோடியின் பொய்களால் வரலாறுகள் மாறி...