×

திருவில்லிபுத்தூர் அருகே சுரங்கப்பாதையில் பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள சுரங்கப்பாதையில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி அருகே லட்சுமியாபுரம்-காமராஜர் நகர் சாலையில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. முட்புதரில் இருந்து வௌியேறும் விஷப்பூச்சிகளான கட்டுவிரியன், நல்லபாம்பு உள்ளிட்ட பாம்புகள் அடிக்கடி இந்த சுரங்கப்பாதையை கடந்து செல்கின்றன.

கும்மிருட்டாக இருப்பதால் நடந்து செல்வோர் விஷப்பூச்சிகள் கடித்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே சுரங்கப்பாதையில் மின்விளக்குகள் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : tunnel ,Srivilliputhur , Increase in snake infestation in the tunnel near Srivilliputhur: Public fear
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!