×

ரூ1 லட்சம் பணம் கொடுத்து பட்டம் வாங்கிய சொப்னா: போலீஸ் விசாரணையில் குட்டு அம்பலம்

திருவனந்தபுரம்: தங்கராணி சொப்னா பஞ்சாப் தேவ் கல்வி அறக்கட்டளையில் இருந்து போலி பட்ட சான்றிதழை பெற்றதாக போலீசார் கண்டுபிடித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் முக்கிய நபரான சொப்னா உள்பட 30க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் அமீரக தூதரகத்தில் வேலை பார்த்து வந்த சொப்னா அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
 பின்னர் கேரள அரசின் ஐடி துறையின் கீழ் ெசயல்படும் விண்வெளி பூங்கா திட்டத்தில் உயர் பதவியில் சேர்ந்தார்.

10ம் வகுப்பு தகுதி மட்டுமே உள்ள சொப்னா இந்த வேலையை பெற போலி பிகாம் சான்றிதழ் தயாரித்து அளித்துள்ளார். இது மகாராஷ்டிராவின் தாதா சாஹிப் அம்பேத்கர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பிகாம் பட்ட சான்றிதழ் ஆகும். தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு, சொப்னாவின் நியமனமும் சர்ச்சையில் சிக்கியது. இதையடுத்து நடந்த விசாரணையில் அவர் அளித்த பிகாம் சான்றிதழ் ேபாலி என்பது தெரியவந்தது. இதை குறிப்பிட்ட பல்கலைக்கழகமும் உறுதிப்படுத்தியது. இந்த சான்றிதழை உண்மையாக்க சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக பெயரில் போலி வலைத்தளத்தையும் உருவாக்கி உள்ளனர்.

திருவனந்தபுரம் தைக்காடு பகுதியில் செயல்பட்டு வந்தள கல்வி வழிகாட்டல் மையம் மூலம், சொப்னா இந்த போலி பட்ட சான்றிதழை ரூ1 லட்சம் ெகாடுத்து வாங்கி உள்ளார். பஞ்சாப் தேவ் கல்வி அறக்கட்டளையில் இருந்து போலி பட்ட சான்றிதழை பெற்று உள்ளனர். திருவனந்தபுரத்தில் உள்ள கல்வி வழிகாட்டல் மையம் தற்போது மூடிப்பட்டுவிட்டது. அதன் உரிமையாளர்களை கண்டுபிடித்து இந்த வழக்கில் சேர்க்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த சொப்னா வாங்கிய சம்பளம் ரூ19.2 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Sopna ,police investigation , Sopna graduated with Rs 1 lakh: Kuttu exposed in police investigation
× RELATED அதிர்ஷ்டசாலியாக தேர்வானதாக இ-மெயில்...