×

இந்தியாவில் வேகமெடுக்கும் உருமாறிய கொரோனா வைரஸ்!: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38-ஆக அதிகரிப்பு!!

டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. 6 சோதனை மையங்களில் எடுக்கப்பட்ட சோதனை முடிவுகளில் தற்போது இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் இதுவரை 38 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் 2 இடத்தில் எடுக்கப்பட்ட சோதனைகளில் கிட்டத்தட்ட 19 நபர்களுக்கு  உருமாறிய கொரோனா உறுதியாகியுள்ளது. கொல்கத்தா பரிசோதனை கூடத்தில் ஒருவருக்கும், புனேவில் இருக்கக்கூடிய சோதனை மையத்தில் 5 பேருக்கும், ஹைதராபாத்தில் 3 பேருக்கும், பெங்களூருவில் 10 பேருக்கும் என 6 இடங்களில் மொத்தம் 38 நபர்களுக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

வைரஸ் உறுதியான 38 நபர்களும் அந்தந்த மாநில அரசுகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட தனி அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 38 பேருடன் தொடர்புடைய நபர்களை கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகின்ற 6ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு விமான சேவை தொடங்கவிருக்கிறது. 8ம் தேதியி பிரிட்டனில் இருந்து மீண்டும் இந்தியாவிற்கு விமான சேவை தொடங்கவுள்ளது.

ஆதனால் பிரிட்டனில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ஏதேனும் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அவர்களுக்கு மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த எண்ணிக்கை தற்போது 38 ஆக அதிகரித்திருக்கிறது. தொடர்ச்சியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், ஒவ்வொரு மாநில அரசுகள் எடுத்துவரும் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது. 


Tags : India ,victims , India, Transformed corona, number of victims increased to 38
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!