சிவகாசி அருகே பள்ளியை சீரமைக்க வேண்டும்-கிராமமக்கள் வலியுறுத்தல்

சிவகாசி : சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடத்தை மராமத்து செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டு வருகின்றது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி இயங்கவில்லை.

இந்த பள்ளி கட்டிடம் பல வருடங்களாக சேதமடைந்து காணப்படுகின்றது. கடந்த சில வாரங்களுக்கு பெய்த கனமழையால் பள்ளி கட்டிட சுவர் கடுமையாக சேதடைந்து அபாகரமான நிலையில் உள்ளது. மேலும் வகுப்பறையின் மேற்கூரையும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

பள்ளி இயங்காததால் வேறு அசம்பாவிதம் ஏற்படவில்லை. பள்ளி கட்டிடம் அருகே குடியிருப்பு வீடுகள் உள்ளன. சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடத்தின் அருகில் அபாயம் தெரியாமல் சிறுவர்கள் விளையாடுகின்றனர். கொரோனா முடிவடையும் நேரத்தில் விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் நமஸ்கரித்தான்பட்டி பள்ளி கட்டிடத்தை உடனடியாக மராமத்து செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>