×

கொடைக்கானலில் குடிநீர் சுத்திகரித்து வழங்கப்படுமா?மக்கள் எதிர்பார்ப்பு

கொடைக்கானல் : கொடைக்கானலில் விநியோகிக்கப்படும் குடிநீரை நகராட்சி சுத்திகரிப்பு செய்து வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் நகராட்சி பழைய குடிநீர் தேக்கத்தில் செயல்படாத சுத்திகரிப்பு  நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் உள்ள இயந்திரம் பல ஆண்டுகளாக இயங்காமல் உள்ளது. பழைய நீர்தேக்கம் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. அப்போதைய மக்கள் தொகையைக் கொண்டு இந்த சுத்திகரிப்பு இயந்திரம் உருவாக்கப்பட்டிருந்தது.

தற்போது மக்கள் தொகை அதிகமாக உள்ள காரணத்தால் இந்த சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் குடிநீர் சுத்திகரிப்பு செய்து குடிநீர் வழங்குவது சாத்தியக்கூறு இல்லை. ஆனாலும் கொடைக்கானல் நகராட்சியால் விநியோகிக்கப்படும் குடிநீரை சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு வழங்க இதுவரை தேவையான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜிம்கானா பகுதியிலிருந்து வழங்கப்படும் குடிநீர், பழைய நீர் தேக்கத்திலிருந்து வழங்கப்படும் ஆகியவவை சுத்திகரிப்பு செய்யாமல் இதுவரை வழங்கப்பட்டு வருகிறது.

கொடைக்கானல் இயற்கை சூழ்ந்த நிலையில் உள்ளதால் குடிநீரால் இதுவரை நோய்கள் மக்களை தாக்காமல் உள்ளது. ஆனால் வறட்சியான காலங்களில் விநியோகிக்கப்படும் குடிநீரால் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டு வருகிறது. ஆனால் கொடைக்கானல் நகராட்சி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல்  குடிநீரை விநியோகித்து வருகிறது.

விநியோகிக்கப்படும் குடிநீர் சுத்திகரிப்பு செய்யாமல் பெயரளவிற்கு குளோரின் போன்றவற்றை கலந்து வினியோகித்து வருகின்றனர். வரும் காலங்களிலாவது விநியோகிக்கப்படும் குடிநீரை சுத்திகரிப்பு செய்து வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு புதிய சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து குடிநீரை விநியோகிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kodaikanal , Kodaikanal: The public wants the municipality to purify and supply the drinking water distributed in Kodaikanal
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...