×

தேர்தல் முடிவை மாத்து!: ஜார்ஜியா மாநில தேர்தல் அதிகாரியை தொடர்புகொண்டு எச்சரித்த டிரம்ப்...மிரட்டல் ஆடியோ வெளியாகி சர்ச்சை..!!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஜார்ஜியா மாநில தேர்தல் அதிகாரியை தொடர்புகொண்டு தேர்தல் முடிவை மாற்றும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக் கொண்டதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அமெரிக்க அதிபருக்கான தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அமெரிக்காவில் 46வது ஜனாதிபதியாக வருகிற 20ம் தேதி பதவியேற்கிறார். குடியரசு கட்சியை சேர்ந்த வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன் வெற்றியை ஏற்க தொடர்ந்து மறுத்து வருகிறார்.

இந்நிலையில் தேர்தல் முடிவு தொடர்பாக டிரம்ப் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அண்மையில் ஜார்ஜியா மாநில தேர்தல் அதிகாரியான பிராட் ராபென்ஸ் பெர்கர் என்பவரை தொலைபேசியில் தொடர்புக் கொண்ட டிரம்ப், ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி இடையே தற்போது 11779 வாக்குகள் வித்யாசம் மட்டுமே உள்ளதாகவும் எனவே மீண்டும் வாக்குகளை என்னும்படியும் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் தேர்தல் அதிகாரியை டிரம்ப் மிரட்ட தொடங்கியுள்ளார். கள்ள வாக்குகளுக்கு ஏற்பாடு செய்யவில்லை என்றால் விளைவு ஆபத்தானதாக இருக்கும் என டிரம்ப் மிரட்டுவதும் ஆடியோவில் இடம் பெற்றுள்ளது.

எனினும் டிரம்பின் கோரிக்கையை பிராட் ஏற்க மறுத்துவிட்டார். இந்த உரையாடல் தொடர்பான ஆடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வரும் 6ம் தேதி அதிபர் தேர்தலுக்கான  தேர்தல் வாக்குகளை அமெரிக்க நாடாளுமன்றம் சரிபார்க்க உள்ள நிலையில், ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. ஜார்ஜியா மாகாணத்தில் ஜோ பைடன், 74 தேர்தல் சபை வாக்குகளை அதிகம் பெற்று அதிபர் தேர்தலில் டிரம்பை தோற்கடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Mathew ,state election official ,Trump ,Georgia , Election results, Georgia state election official, Trump, intimidation, audio
× RELATED ஓடிடியில் வெளியாகிறது பிரேமலு