×

கேரள வனப்பகுதியில் 2 மாத குட்டி யானை சாவு-காவல் காக்கும் யானைக்கூட்டம்

கூடலூர் :  கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பத்தேரி தாலுகா முத்தங்கா சரணாலயத்தை ஒட்டிய குறிச்சியாடு வனப்பகுதியில் 2 மாத குட்டி யானை ஒன்று இறந்து கிடப்பதை வனப்பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.  குட்டி இறந்த இடத்தில் தாய் யானையுடன்  4 யானைகள் நின்றன.

அந்த யானைகள் அங்கிருந்து அகலாமல் இருந்தன. இதனால் பட்டாசு வெடித்தும், சத்தங்கள் எழுப்பியும் அந்த யானைகளை விரட்ட முடியாத நிலை ஏற்பட்டது. யானைகள் அங்கிருந்து அகன்ற பின்னரே குட்டியை உடற்கூறு ஆய்வு செய்ய முடியும். சடலத்தை மீட்ட பின் யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்றும் கேரள  வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : forest ,Kerala , Kudalur: Wayanad District of Kerala in the forest area adjacent to the Muthanga Sanctuary in Bathery taluka
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...