×

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 16,505 பேர் பாதிப்பு; 214 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,03,40,470-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,49,649-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில தினங்களாக புதிய தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரத்திற்குள் இருந்தது. தற்போது 20 ஆயிரத்தைவிட குறைந்துள்ளது.  குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

இதனால் நலம் பெற்றோர் எண்ணிக்கை 99.46 லட்சத்தை கடந்தது. மேலும் ஒரே நாளில் 16,505 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 3 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்தது. 2.43 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,49,649 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 96.19 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.45 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 2.36 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 7,35,978 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 17 கோடியே 56 லட்சத்து 35 ஆயிரத்து 761 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

Tags : corona exposure ,India ,fatalities , In India, corona vulnerability
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!