சென்னை விமான நிலையத்தில் தெலுங்குதேச எம்.எல்.சி. கைது

சென்னை: ஆந்திர மாநில தெலுங்குதேச எம்.எல்.சி.யை சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர். சென்னை விமான நிலைய  உள்நாட்டு முனையத்திற்கு பெங்களூருவில் இருந்து தனியார் பயணிகள் விமானம் நேற்று இரவு வந்தது.  இதில்  ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த தெலுங்குதேச கட்சி எம்.எல்.சி. பி.டெக் ரவி  என்ற ரவீந்திரா ரெட்டி சென்னை வந்திருந்தார்.  

அவர் வருகையை எதிர்பார்த்து சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த  ஆந்திர மாநில போலீசார், பி.டெக் ரவியை கைது செய்தனர். அவரை காரில் ஏற்றி  ஆந்திராவிற்கு அழைத்துச் சென்றனர்.  கடப்பாவில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த ஊரான புலிவெந்துலாவில் 2018ம் ஆண்டு நடந்த கலவர வழக்கு சம்பந்தமாக இவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories:

>