வீரபாண்டிய கட்டபொம்மன் தியாகத்தை நினைவுகூர்வோம்: டிடிவி தினகரன் புகழாரம்

சென்னை: தமிழகம் முழுவதும் சுதந்திர போராட்ட வீரர் வீர பாண்டிய கட்டபொம்மனின் 260வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் கட்ட பொம்மன் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து தினகரன் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாள். அதிகாரத்துக்கு அஞ்சாமல் கடைசிவரை நெஞ்சு நிமிர்த்தி களத்தில் நின்ற அந்த மாவீரர், தாய் நாட்டுக்காக செய்த தியாகத்தை என்றைக்கும் நினைவுகூர்ந்து வணங்குவோம்.இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories:

>