×

முறைகேடு தவிர்க்க விடைத்தாளில் மாற்றம்: தலைவர் பாலச்சந்திரன் தகவல்

சென்னை: கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் உள்ள குரூப்-1 தேர்வு மையத்தில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: இதற்கு முன்னர் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளை முழுமையாக அறிந்து அதன் அடிப்படையில் ஓ.எம்.ஆர். தாளில் பல்வேறு புதிய முறைகள் புகுத்தப்பட்டுள்ளது. இத்தேர்வு எழுதப்படும்போது தேர்வர்களின் விவரங்கள் அடங்கிய தொகுப்பானது தேர்வு மையங்களிலேயே தனியாக பிரிக்கப்பட்டு, தேர்வு விடைத்தாள் மட்டுமே தனியாக வேறொரு கவர்களில் வைக்கப்படும். யாராவது வழியிலேயே ஓ.எம்.ஆர். தாள்களை மாற்ற முடியாதபடி, ஓ.எம்.ஆர். தாள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஓ.எம்.ஆர். தாளின் பட்டியலின் மேற்பகுதியில் உள்ள விவரங்கள் தாளின் ஓரப்பகுதியில் கொண்டு வரப்பட்டு, அதை கிழித்து வைக்கும்படி செய்யப்பட்டுள்ளது.  தேர்வர்கள் எழுதி முடித்தபிறகு, எத்தனை ஏ, பி, சி, டி என்ற விவரத்தை அந்த தேர்வர்கள் முன்னிலையில் சரிபார்த்து கண்காணிப்பு அலுவலர்கள் கையெழுத்திடும் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம், அழியும் மையினால் தேர்வை எழுதிவிட்டு, வழியிலேயே அந்த மையை புதிதாக மாற்ற முடியாது. கருப்பு பேனாவால் மட்டுமே எழுத வேண்டும் என்ற நடைமுறையையும் கொண்டு வந்துள்ளோம். கூடுதலாக 1.15 மணி வரை கால அவகாசம் வழங்கி, தேர்வர்களும், கண்காணிப்பு அலுவலர்களும் சரிபார்த்து சில விவரங்களை கொடுக்க வழங்கி உள்ளோம்.  

கேள்விகள் தவறு என்கிற பட்சத்தில் புதிதாக ‘இ’ என்ற குறிப்பை கருமையாக்கினால் முழு மதிப்பெண் வழங்கும் வகையிலும், 200 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும் போன்ற புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளோம். ஓ.எம்.ஆர். தாள் பல்வேறு முறைகேடுகளுக்கு காரணமாக இருப்பதால், தேர்வர்களின் கட்டை விரல் ரேகை பெறப்பட வேண்டும். ஒவ்வொரு தேர்வர்களுக்கும் வெவ்வேறு விதமான சீரியல் எண் கொண்ட கேள்வித்தாள்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாலசந்திரன் கூறினார். பேட்டியின்போது மாவட்ட கலெக்டர் ராஜாமணி உடனிருந்தார்.


Tags : Change in answer sheet to avoid abuse: Chairman Balachandran Information
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...