ஆன்லைன் ரம்மியால் இஸ்ரோ ஊழியர் தற்கொலை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே காட்டாக்கடை குற்றிச்சல் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதன். இவரது மகன்கள் வினீத் (29), வினீஷ் (26). வினீத் இஸ்ரோவில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வந்தார். இவர், வீட்டுக்கு அருகே உள்ள ரப்பர் தோட்டத்தில் தூக்குபோட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். நெய்யாறு அணை போலீசார் விசாரணையில் வினீத், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையானது தெரியவந்தது. தொடக்கத்தில் அவரது வங்கி கணக்கில் சிறிய தொகை வந்து உள்ளது. இதனால், தனக்கு தெரிந்தவர்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி ஆன்-லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதில் அவருக்கு ரூ.20 லட்சத்துக்கும் மேல் கடன் ஏற்பட்டு உள்ளது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால், கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வினீத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Related Stories:

>