பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி

திருவனந்தபுரம்: தெற்கு கர்நாடகா புத்தூர் ஈஸ்வர மங்கலம் பகுதியை சேர்ந்த திருமண கோஷ்டியினர் ஒரு பஸ்சில் நேற்று கேரள எல்லையை ஒட்டிய செத்துகயம் பகுதிக்கு சென்றனர். பஸ்சில் 65க்கும் மேற்பட்டோர் இருந்தனர். நேற்று காலை இந்த பஸ் கேரள பகுதியான பாணத்தூரில் சென்று கொண்டு இருந்தது. இறக்கமான வளைவு சாலையில் பஸ் வேகமாக திரும்பியபோது, திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள ஒரு வீட்டின் மீது கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதில், சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் இறந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

Related Stories:

>