திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் பெற கொட்டும் பனியில் காத்திருந்த பக்தர்கள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 25ம் தேதி முதல் நேற்று வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று நள்ளிரவு முதல் சொர்க்கவாசல் ஆகம முறைப்படி மூடப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் வழக்கம்போல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் ஏற்கனவே ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்தனர். இலவச தரிசன டிக்கெட்டுகள் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் திருப்பதி பூதேவி காம்ப்ளக்ஸ் மற்றும் விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வறையில் வழங்கப்பட்டது. இந்த டிக்கெட்டுகளை பெற பக்தர்கள் நீண்ட வரிசையில் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர். இந்த டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் இன்று காலை முதல் தரிசனம் செய்கின்றனர்.

Related Stories:

>